கன்னி - ஆகஸ்ட் மாத ராசிபலன்


கிரகநிலை:

ராசி ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21.08.2025 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

25.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு மனை சார்ந்த கடன் பிரச்சனை அகலும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.  தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். 

உத்திரம்:

இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். தனாதிபதி சூர்யன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 

ஹஸ்தம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

சித்திரை:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்குவது 

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25



Leave a Comment