ரிஷபம் - ஆகஸ்ட் மாத ராசிபலன்
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
03.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் விரைய ஸ்தானத்தின் பலம் மூலம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். கலைத்துறையினருக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
க்ருத்திகை:
இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
ரோகினி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ம்ருகசீரிஷம்:
இந்த மாதம் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 06, 07
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 15, 16





Leave a Comment