மேஷம் - ஆகஸ்ட் மாத ராசிபலன்


கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21.08.2025 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் பஞ்சம பூர்வ புண்ணிய பலத்தால் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். வீடு மனை சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். 

அஸ்வினி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

பரணி:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

க்ருத்திகை:

இந்த மாதம் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் நன்மை தரும்

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 03, 04, 05, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 13, 14



Leave a Comment