தன்வந்திரி பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வர்ருக்கு புஷ்பாஞ்சலி...


உலக மக்கள் நோயின்றி ஆரோக்யத்துடன் வாழ, நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு பிரத்யோகமான முறையில் வாலாஜாபேட்டையில் ஆலயம் அமைத்து அவருடன் 77 பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் நலனே குறிக்கோலாக கொண்டு தினசரி யாகங்கள், விசேஷ பூஜைகள் என்ற முறையில் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார் இப்பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுள் என்ற முறையில், அக்கடவுள்களை பிரதிஷ்டை செய்து அதற்குரிய ஹோமங்கள் இங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது. உண்டியல், தனி நபர் அர்ச்சனை என்று இல்லாமல் உலக நலனுக்காக கூட்டு பிரார்த்தனையும், சிறப்பு ஹோமங்களுமே இங்கு பிரதானமாகும். தன்னுடைய தாய்க்கு ஏற்பட்ட கொடிய நோய் வேருயாருக்கும் வரக்கூடாது என்ற முறையில் இந்த ஆரோக்ய பீடத்தை நிறுவி, பெற்றோருக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் தேச நலம் தேக நலம் என்ற முறையிலும், தேக நலமே தேச நலம் என்ற முறையிலும் பாரத மாதாவிற்கு ஆலயம் அமைத்துள்ளார்.

பாதாள சொர்ண சனீஸ்வரர் :

கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சனி சாந்தி ஹோமம் நடைபெற்று, காலசக்கிரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பீடத்தில் சுகபிரம்மரிஷியின் ஓலைச்சுவடியில் தெரிவித்த பிரகாரம், நவக்கிரகங்களில் நீதிபதியாக உள்ள சனி பகவானுக்கு ஒரு ஆலயம் அமைக்க ஸ்வாமிகள் முன்வந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கும் ஆலயம் அமைத்து விசேஷ பூஜைகள் செய்து வருகிறார்.

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். பிரபஞ்சத்தையை ஆட்டிப்படைக்கும் ஒரு மாபெரும் கிரகம் தான் சனீஸ்வரர். தவறு செய்பவர்களை தண்டிப்பதையும், தர்மம் செய்பவர்களை காப்பதும் இவருடைய முக்கிய பணியாகும். ராஜாங்க பதவிகளில் அமர வைப்பவரும், மரணத்தை மாற்றுபவரும் இவரே. ஆயுள் தோஷத்தை நீக்கி ஆரோக்யத்தை அளிப்பவரும் சனி பகவானே. அவரவர் பாப புண்ணியங்களுக்கேற்ப பலா பலன்களை அள்ளிதருபவரும் இவரே. இவருக்கு மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வரருக்கு உலகில் எங்கும் இல்லாதவாறு முதன்முறையாக சொர்ணத்தில் விக்ரகம் அமைத்து, 20x27 என்ற நீள அகலத்தில், 13 படிகள் கொண்டு பாதாளத்தில் பிரத்யோக மண்டபம் அமைத்து பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டு, உலகில் முதல் சொர்ண சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வருகிறது என்பது நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியதாகும்.

பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி :

ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, அர்தாஷ்டம சனி, ஜென்ம சனி, பாத சனி போன்ற சனிக்கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், சனி பகவானால் மக்களுக்கு ஏற்படும் பயங்கள் நீங்கி சுபிக்ஷங்கள் பெற மேற்கண்ட பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி வருகிற 19.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை விசேஷ பூஜைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

 



Leave a Comment