குல தெய்வ வழிபாடு அவசியம் ஏன்?


குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  

ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  

அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.
 



Leave a Comment