ஏப்ரல்17-இல் திருப்பதி படிவிழா


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் நடந்தே சென்று, தரிசனம் செய்யும் படிவிழா வரும் 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என திருப்பதி திருமலை படிவிழா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஆ.செ.நரசிம்மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
48-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த படிவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினருடன் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பதி அலிபிரி பாலாஜி பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.டி.டி பூதேவி சத்திரத்தில் பஜனை மற்றும் பக்தி பாடல்களுடன் தொடங்குகிறது. இரவு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீஜீயர் சுவாமிகள், ஸ்ரீசதுர்வேதி சுவாமிகள் முன்னிலையில் படிவிழா பாடல் பாட, திருவேங்கட ஜோதி பூஜை நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.



Leave a Comment