அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் 9-ந்தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும். அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்று பகல் 10 மணி முதல் 12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சாமிக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத்தொடர்ந்து தங்கரிஷப வாகனத்தில் சாமி மாட வீதியுலாவும் நடைபெறும்.
விழாவின் தொடர்ச்சியாக 10-ந் தேதி கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி நடைபெறும். 11-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 12 மற்றும் 23-ந் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
விழாவின் நிறைவாக, வருகிற 14-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், குமரகோவிலில் மண்டகபடியும் நடைபெறும். அன்று இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் சாமி வீதியுலா நடைபெறும்.



Leave a Comment