யானையின் மேல் வைத்து பால்குட ஊர்வலம்....


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலய பால்குடம் திருவிழா நடைபெற்றது. அது சமயம் காவிரி புண்ணிய நதியிலிருந்து, இருந்து பால்குடம் எடுத்தும், மேலும் யானையின் மீது பால் குடத்தை எடுத்து சுமந்தவாறு  முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் ஆராதனை நடைபெற்று, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா கணபதிக்கு  பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

 



Leave a Comment