நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா... காவடி எடுத்து, தீச்சட்டி ஏந்தி வழிபாடு...


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆறாம் நாள் திருவிழாவான இன்று திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் தீச்சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் திகழ்கிறது.இந்த கோயிலின் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.அதன் பின் நாள்தோறும் அம்மன் வீதி உலா காட்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வந்த நிலையில் ஆறாம் நாள் திருவிழாவான இன்று குளத்தூர் கீரனூர் சத்தியமங்கலம் காவேரி நகர், மேலூர் உள்ளிட்ட பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவை காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்தபடியே ஆடி வந்தும் தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேற்று கடனை நிறைவேற்றினர்.

பின்னர் மக்கள் அனைவரும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடத்தி இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் எனவும் நோய் நொடி இன்றி மக்கள் வாழ வேண்டிய கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.



Leave a Comment