அறிய சக்திகளை தரும் மகா சிவராத்திரி விரதம்


சிவராத்திரி அன்று சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவனின் அருள் மட்டுமின்றி அவர் உடலில் சரிபாதியாய் வீற்றிருக்கும் பார்வதிதேவியின் பரிபூரண அருளையும் நாம் பெற இயலும். முருகப்பெருமான், குபேரன், இந்திரன் உள்ளிட்ட பலர் சிவராத்திரி அன்று விரதம் இருந்து பல அறிய சக்திகளை பெற்றனர் என்று கூறப்படுகிறது.

சிவராத்திரி

மானின் கெஞ்சலுக்கு மனமிரங்கிய வேடன்,  மானை சீக்கிரம் வரச்சொல்லி விட்டுவிட்டான். அப்போது அவன் அசைவால் நீர் கீழே சிந்தி மரத்தின் இலைகளும் சில உதிர்ந்தன. அவை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்திருமேனியின் மீது பட்டு தானாக அபிஷேகம் நடந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சலசலக்கும் ஓசை கேட்க,  அப்போது ஒரு பெண் மானைக் கண்டான் வேடன். அதுவும் தன் இணையான ஆண் மானை தேடி வந்ததாகவும், கருவுற்றிருக்கும் தனது மூத்தாளை கண்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் கெஞ்சியது. வேடனும் அதையும் சீக்கிரம் வந்துவிடுமாறுச் சொல்லிவிடுவித்தான்.

அப்போதும் நீர் சிந்தி வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்து வயதான ஓர் ஆண் மான் எதிர்ப்பட, அதுவும் குட்டியை ஈன்றிருக்கும் தங்களது மகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றது. மூன்றாவது முறையாக அபிஷேகமும் நடந்தது. இறுதியாக இரு மான்குட்டிகள் எதிர்ப்பட, அவையும் தங்களது பெற்றோர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வருவதாகச் சென்றன. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என எல்லா மான்களிடமும் குட்டிகள் தாங்கள் செய்த சத்தியத்தைக் கூறி, வேடனை நோக்கி வந்தன. அவற்றோடு எல்லா மான்களும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்தன.

மான் கூட்டத்தினைக் கண்ட வேடன் குறிவைக்க தயாராக,  நான்காம் ஜாம வேளை நெருங்கியது. சொன்ன சொல்லை மீறாத அந்த மான்களின் செயலால் மனம் நெகிழ்ந்த வேடன் அவற்றை வணங்கி, தருமத்தை மீறாத உங்கள் செயல் என்னை மகிழ்விக்கிறது. என் குடும்பமே பட்டினியால் கிடந்தாலும் சரி, உங்களைக் கொல்லமாட்டேன் என்று வாழ்த்தினான். அப்போது உண்டான அசைவால் நீர் சிந்தி ஈசனை குளிப்பாட்டியது.

வில்வ இலைகள் விழுந்து ஈசனை அர்ச்சித்தன. வேடன் இரவெல்லாம் கண்விழித்து மானுக்குக் காத்திருந்த நாள் மகாசிவராத்திரி திருநாள். நான்கு ஜாமத்திலும் தற்செயலாக நடந்த அந்த பூஜையால் ஈசன் மகிழ்ந்து உடனே அங்கு தோன்றினார். ஒளிப்பிழம்பாக விடையேறிய பெருமானாய்த் தோன்றிய ஈசனை மான்களும், வேடனும் வணங்கித் துதித்தார்கள். 'சொன்ன சொல்லை மீறாத மான்களே உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இனி மான் ஏந்தியே காட்சி தருவேன் என்று ஈசன் வாக்களித்தார்.

மேலும் வேடனை நோக்கி 'வேட்டையாடுவது உன்னுடைய தொழில் என்றாலும், மான்களுக்காக மனமிரங்கி அவற்றைக்காத்த வியாதனே, நீ அறியாமல் செய்தாலும், மகாசிவராத்திரியன்று நீ செய்த நான்கு கால பூஜைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். மகாசிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை ஈரேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமைகளை அளிக்கவல்லது. எனவே நீ செய்த பூஜைக்கு ஈடாக வேண்டுவனக்கேள்' என்றார் ஈசன்.

தங்களையே நேரிடையாகக் கண்ட பிறகுதான் வேண்டுவது ஒன்றுமில்லை எனக்கூறி இனிக் கொல்லாவிரதம் ஏற்று நடப்பேன் என்றும் உறுதிகூறினான். அவனது பணிவுக்கு மகிழ்ந்த ஈசன், "சிவராத்திரி விரதம் மேற்கொண்ட ஒருவருக்கு வரமளிக்காமல் இருப்பது எனக்கு வழக்கமில்லை" என்று கூறி "இனி நீ வியாதனில்லை, குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமர் இந்தக் காட்டுக்கு வரும்போது அவரை நீ சந்திப்பாய், அதுமட்டுமல்ல, அவருக்கே தம்பியாகும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்' என்று வாழ்த்தி மறைந்தார். சிவராத்திரி விரத மகிமையால் ஒரு சாமானிய மனிதன் குகன் என்று மாறி ஸ்ரீராமர் வாயால் சகோதரன் என்றும் அழைக்கப்பட்டார். அறியாமல் செய்த சிவராத்திரி பூஜையே தெய்வ நிலையைத் தருமென்றால் இந்த நாளின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?



Leave a Comment