அரோகரா என்ற சொல்லின் அர்த்தம்...


அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கம். ரோகம் என்றால் நோய் அரோகம் என்றால் நோயில்லாமல் அரன் என்றால் காப்பவன் ஹர என்றால் நீக்குபவன். இதற்கான பொருள்... இறைவனே, நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக' என்பதாகும்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தை மாதத்தில் பூச நட்சத்திமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. தைப்பூசம்  தீயவைகளை அழிக்கும் முருகனின் ஞானவேல் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள்.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம்.

எப்பொழுதெல்லாம், கடவுள் இருப்பதையே மறந்து தேவலோக வாசிகளான தேவர்கள் தாங்கள் தான் பெரியவர்கள், தங்களை மிஞ்சிய சக்தி ஏதும் கிடையாது, என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக மமதையில் திளைக்கிறார்களோ, அப்போதெல்லாம், அவர்களுக்கு புத்திமதி சொல்வதற்காக, மறுபக்கம் ஏதாவது ஒரு திருவிளையாடலை நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது உண்டு.

தேவர்களின் குணநலன்களை நன்கு அறிந்த அசுரர்களும் அவ்வப்போது, தேவர்களுடன் போரிட்டு, அவர்களை இந்திரலோகத்தில் இருந்து துரத்தி விட்டு, அதை தாங்கள் கைப்பற்றி ஆட்சி செய்வதுண்டு. தேவர்களோ, அசுரர்களை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்து கொள்வார்கள். கூடவே தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முதலில் பிரம்ம தேவரை அனுகி கதறுவார்கள்.

பிரம்மாவும், என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் ஸ்ரீமன் நாராயணனை அனுகி காப்பாற்ற கேளுங்கள் என்று ஒதுங்கிக் கொள்வார். தேவர்களும் வேறு வழியில்லாமல், ஸ்ரீமன் நாராயணனை நாடி, அசுரர்களின் கொடுமையிலிருந்து தங்களை காக்க வேண்டும் என்று மன்றாடுவார்கள்.

ஆனால், ஸ்ரீமன் நாராயணனோ, என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் எல்லாம் ஈசனையே நாடி அவரை சரணாகதி அடையுங்கள். அவர் உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்று அவரும் ஒதுங்கிக் கொள்வார்.  இறுதியில் எம்பெருமான் ஈசனை நாடி தங்களை காத்தருள வேண்டும் என்று சரணடைவார்கள்.

வேறு வழியில்லாமல், ஈசனும் தேவர்களை காத்தருள, திருவிளையாடலை நடத்தி சுபம் போட்டு முடித்து வைப்பார்.  இது தொடர்ந்து நடக்கும் விளையாட்டாகும்.

 



Leave a Comment