தீங்கில் இருந்து கவசமாக காக்கும் அமாவாசை அன்னதானம்...


ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று அன்னதானம் செய்வது நன்மையை பயக்கும்  அப்படி முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் கூட அன்னதானம் செய்யலாம் .

புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். இவை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதை எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுப்பது நம்மையும் நம் சந்ததியினரையும் காக்கும் . நம் முன்னோர்களுக்கு , அமாவாசை அன்று  அவர்களை நினைத்து  நாம் செய்யும்  , தர்ப்பணமாவது நம்மையும் நமக்குப் பின் வரும் ஏழேழு தலைமுறை சந்ததியினரையும் , எல்லா தீங்கில் இருந்தும் கவசமாக காக்கும்.

 



Leave a Comment