ஞானகுருவான ஹயக்ரீவர் ஸ்லோகம்...


'கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்ற வர் ஹயக்ரீவர். பிரம்மனை படைத்து அவருக்கு வேதங் களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக் ரீவருக்கு உண்டு. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ  வித்யானாம்

ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்

ஹயக்ரீவ முபாஸ்மஹே

என்று பள்ளிகளில் தினசரியும் ஸ்லோகம் கூறி ஹயக்ரீவ மூர்த்தியை வழிபட்டு அன்றைய தினத்தை தொடங்குகின்றனர். கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். இந்த அவதாரம் ஆனது தசவதாரத்தில் இணை யவில்லை அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.

அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித் தி பெற்றது மனித உடலும், குதிரை முகமு ம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங் கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.

ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத் துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது.

ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார். மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வண ங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

 



Leave a Comment