எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? சாஸ்திர விளக்கம்....


20ம் நூற்றாண்டில் எண்ணெய் தோய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது. ஆனால் இதனால் ஏற்படும் பலன்கள் ஏறாலம்...
ஆண்களுக்கான பலன்கள் ....
ஞாயிறு எண்ணைய் குளியல் ;- இருதயத்தில் தாபம் .
திங்கள் எண்ணெய் குளியல் ;-பொழிவு தரும் மேனி
செவ்வாய் எண்ணெய் குளியல் ;-அற்பாயுள்
புதன் எண்ணெய் குளியல் ;-செல்வநிலை மேலோங்கும்
வியாழன் எண்ணெய் குளியல் ;-தரித்திரம் தாண்டவம் ஆடும்
வெள்ளி எண்ணெய் குளியல் ;-ஆண்களுக்கு ஆபத்தை தரும்
சனி எண்ணெய் குளியல் ;-தீர்க்காயுள் தரும். எனவே தான் சனி நீராடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
பெண்களுக்கான பலன்களை பார்க்கலாம்...
செவ்வாய் எண்ணெய் குளியல் ;-பாக்ய விருத்தி தரும்
வெள்ளி எண்ணெய் குளியல் ;-செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள்
இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!!!
"தசமி,பஞ்சமி ,திருதியை ,சப்தமி ,துவிதியை ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது . உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள் )எண்ணெய் குளியல் செய்ய ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவர்த்தி உண்டாகும்.
பிரதமை திதி
சதுர்த்தி திதி 
சஷ்டி திதி
நவமி திதி
சதுர்த்தசி திதி
அமாவாசை திதி
ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்யின் ஆயுள் குறைவு ஏற்படும். புக்தி குறையும், உடல் வலிமை இழக்கும், செல்வநிலை நாசத்தை அடையும், தவிர்க்க முடியாமல் சாதகமான நாட்களில் இந்த திதிகள் கலந்து வந்தால் சிறிதளவு நெய் அல்லது தண்ணீர் கலந்து எண்ணெய் உடன் கலந்து தேய்க்கலாம். ஜென்ம ,அனுஜென்ம ,திரி ஜென்ம நட்சத்திரம் அமைந்த நாட்களில் மற்றும் தமிழ்மாத முதல் தேதி மற்றும் கேட்டை ,உத்தர ,திருவோணம் ,திருவாதிரை ,போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க செல்வநிலை நாசமும் ஆயுள் குறைவும் அமையும் ஆகவே இதை எல்லாம் தவிர்க்க வேண்டும்.



Leave a Comment