திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் தேர் திருவிழா...


குற்றாலம் அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி கோயிலில் ஐப்பசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள்  நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஐப்பசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டின் ஐப்பசித் திருவிழா கடந்த 9- அம் தேதி  அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவில்  நேற்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலையில் அருள்மிகு விநாயகா், அருள்மிகு முருகன், அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி, அருள்தரும் குழல்வாய்மொழி அம்மன் ஆகிய 4 தேர்களில் சுவாமிகள் திருத்தேரோட்டம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  பக்தர்கள் திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் 15-ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கும், இரவு7மணிக்கும் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும்,  16-ஆம்தேதியன்று தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.18 - ஆம்தேதியன்று விசு தீா்த்தவாரி நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி,அம்மன்,திருக்கோயில் முருகன் பல்வேறு வாகனங்களில் காலை,மாலை  வீதியுலா நடைபெறுகிறது. ஐப்பசித் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள்  செய்து வருகின்றனர்.



Leave a Comment