திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்...


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய் கிழமையில் கோயிலில் ஆழ்வார்  திருமஞ்சனம் என்ற பெயரில் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

வரும் 27ஆம் தேதி முதல் 5 தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது முதலில் மூலவர் ஏழுமலையான் மீது பட்டுத் துணி போத்தப்பட்டது. தொடர்ந்து கருவறை, ஆனந்த நிலையம் விமானம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து  பகுதிகளிலும் தண்ணீர் பீத்தியடிக்கப்பட்ட சுத்தம் செய்யப்பட்டது . பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூரணம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட நறுமண கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

இதில் கோயில் ஜீயர்கள், தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர், அர்ச்சகர்கள்,ஊகழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் மீது தசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பின்னர் காலை 11.45 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளார்.



Leave a Comment