ஸ்ரீமூலபாலகால பைரவர் கோயில் ஆவணி மாததேய்பிறை அஷ்டமி பெருவிழா


வைரவன்பட்டியில் ஸ்ரீமூலபாலகால பைரவர் கோயில் ஆவணி மாததேய்பிறை அஷ்டமி பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம் பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ திரு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீமூலபாலகால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. இக்கோவிலில் நடைபெறும் , தேய்பிறை அஷ்டமி யாக விழா சிறப்பு வாய்ந்தது.

இக்கோயிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமூல பாலகால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா கணபதி பூஜை செய்து, தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. பின்பு கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா பைரவ ஹோமமும், பின்பு சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க, நெய், வஸ்திரம், புஷ்பயாகம் மற்றும் மகாபூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது  இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வெண் பூசணி, தேங்காய், நெய் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, மூலவரை தரிசனம் செய்தனர்.



Leave a Comment