திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா தொடங்கியது


திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 11நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது..

11நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், 9 மணிக்கு அன்ன தர்மம் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 1 மணிக்கும் மாலை 6 மணிக்கும் அன்னர்மம் நடக்கிறது. மாலை 4மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 1-8-22 அன்று 11-ம் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை. 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.



Leave a Comment