மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்... நிகழ்ச்சி நிரல்...


மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயிலும், அங்கு சித்திரைத் திருவிழாவும் மிகவும் விசேஷமானது.மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிவில் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு - 2053, 1431-ஆம் பசலி சித்திரைப் பெருவிழா சித்திரைத் திங்கள் 1-ஆம் நாள் முதல் சித்திரைத் திங்கள் 21ஆம் நாள் வரை (04.04.2022 முதல் 16.04.2022 வரை) மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இச்சித்திரைப் பெருவிழாவின் முக்கியத் திருநாட்களாக

12.04.2082 சித்திரைத் திங்கள் 09-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும்,

13.04.2022 புதன்கிழமை சித்திரைத் திங்கல் 10-ஆம் நான் அருள்மிகு மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும்,

14.04.2022 வியாழக்கிழமை சித்திரைத் திங்கள் 11-ஆம் நாள் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் அருள்மிரு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும்,

15.04.2022 வெள்ளிக்கிழமை சித்திரைத் திங்கள் 12-ஆம் நாள் காலை 6.30 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும்

16.04.2007 சனிக்கிழமை சித்திரைத் திங்கள் 13-ஆம் தாள் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

சித்திரைப் பெருவிழாவில் பக்தகோடி பெருமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மண்ணில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அவர் தம் நல்விழாப் பொலிவு கண்டார்த்தல் உண்மையாம் என உலகர் முன் வருகென உரைப்போம் எனும் சேக்கிழாரின் வாக்கிற்கு இணங்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரின் திருவருளைப் பெற்று எல்லா வளமும் பெற வேண்டி விழைகிறோம்.
 



Leave a Comment