ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனி பகவான் இன்னல்களை  மட்டுமே தருவாரா?


ஏழரை சனிக்கு பயப்படாதவர்கள் இல்லை என்று சொல்லிவிடலாம் ,குறிப்பாக சந்திரன் நின்ற ராசிக்கு முன் பின் ராசியிலும் சந்திர ராசியிலும் சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று வர்ணிக்கின்றனர், இந்த ஏழரை சனி காலத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் படும் இன்னல்களுக்கு ஒரு அளவு இருக்காது என்றும் துன்பத்தை மட்டுமே சனிபகவான் பலனாக வாரி வழங்குவார் என்றும் கூறுவது உண்டு, குறிப்பாக ஒரு ஜாதகத்தில் ஏழரை சனி நடைபெறும் (ஏழரை வருட )காலங்களில் ஏற்படும் இன்னல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை காணும் அன்பர்கள் அவர் இன்னல்களை மட்டுமே தருவார் என்ற கற்பனை எண்ணத்தை அனைவரிடமும்  விதைத்து  இருக்கின்றனர் என்பதே உண்மை. அடிப்படையில் நவகிரங்கள் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்க வல்லமை அற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு" ஏழரை சனி "என்பது ஒரு பொய்யான கூற்று என்பதே தெளிவாக விளக்கம் தரமுடியும்,

 ஏனெனில் சுய ஜாதகம் என்பது லக்கினம் முதல் 12 பாவங்களின் வலிமையின் அடிப்படையில் இயங்குவது ,அதாவது பிறந்த தேதி, நேரம் ,மற்றும் இடம், ஆகிய குறிப்புகளை கொண்டு ஒரு சுய ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகின்றது

சந்திரனை அடிப்படையாக வைத்து கூறப்படும் பாரம்பரிய ஜோதிடம் அனைத்தும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாது. ஜோதிட வரலாற்றில் ஏழரை சனி  என்று ஒன்று இல்லை , சில ஜோதிடர்களின் கற்பனைக் கதையில் வந்தவையாகும். சுய ஜாதக வலிமையை நிலையை தெளிவாக உணர்ந்து, பாவக வலிமையின் தன்மையை கருத்தில் கொண்டு எதிர்கால வாழ்க்கையை சிறப்பாகத் திட்டமிட்டு முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம்.

ஜோதிட  ரீதியாக உள்ள மூடநம்பிக்கைகளை  நம்பி ,வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை உதறித் தள்ளுவது என்பது முற்றிலும் தவறான வழிமுறையாகும், நல்ல ஜோதிடம் தங்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை நிச்சயம் வாரி வழங்கும் இதற்கு மாற்றுக் கருத்து என்பதே இல்லை. 



Leave a Comment