மார்கழி பௌர்ணமி வழிபாடு மற்றும் விரத முறைகள்


ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளன். அப்படி மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் விரத வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.


ஒவ்வொரு பௌர்ணமி தினமும் அம்பிகை வழிபாட்டிற்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அம்பிகைக்கு விரதமிருந்து வழிபடும் முறையும் உள்ளது. அப்படி உபவாசம் இருந்து அம்மனை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வழக்கம். நடராஜரை வழிபடும் நாளாகவும், பெண்கள் தங்கள் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என விரதம் இருக்கும் உன்னதமான நாள். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து நடராஜர், அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமிக்குத் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் விரதம் இருக்கலாம். திருமணமான பெண்களும் விரதம் இருக்கலாம். அல்லது குடும்பத்துடன் விரதம் இருந்து நடராஜரை வழிபடலாம். ஆனால் திருமணமான ஆண்களுக்கான விரதம் இருப்பதற்கான சரியான நாள் இது இல்லை.
 



Leave a Comment