தீபாவளிக்கு முதல் நாளில் (நாளை) ஏற்ற வேண்டிய யம தீபம்.... 


தீபாவளிக்கு முதல் நாளில் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. நாளை (புதன்கிழமை) சிவராத்திரி சதுர்த்தசி திதியில்  தீபம் ஏற்ற சிறப்பு, மாலை 5.30க்கு மேல் 6 மணிக்குள், மண்விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். 

வீட்டு வாசலில் உயரமான  இடத்தில்  வைக்கவும். திறந்த வெளியில் தான் யம தீபம் ஏற்றவேண்டும். தீபம் இரவு முழுவதும் எறியலாம். குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் எறிய வேண்டும். அதுவாகவே நிற்க வேண்டும். மண் விளக்கை மறுநாள் காலையில் ஓடும் நீரில் அல்லது கால் படாத இடத்திலோ அப்புறப்படுத்த வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து வித தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

யமன் என்றதுமே எல்லோரும் அச்சப்படுவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தே பயப்படுவார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை. அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். 

மகாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம். அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
 



Leave a Comment