ஆஞ்சநேயரை பற்றி தெரிந்து கொள்ள!


 ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ' ஸ்ரீ ராம ஜெயம் ' கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

சிவ விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம். நாரயனானில் இருந்து வருகின்ற 'ரா' வும் நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம' வும் சேர்ந்த நாமமே 'ராம'.

சொல்லில் அடங்கா புகழவன். சொல்லின் செல்வன். அஞ்சனைப் புதல்வன். சிவனின் அவதாரன். அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும். அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும். அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம். வானுயர வளர்ந்தாலும் வானரன். தானுயரப் பார்பதில்லை. 'ராம' என்று ஓரு முறை உரைத்தால் போதும். கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.

 அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள்:

 வடை மாலை

வெற்றிலை மாலை

துளசி மாலை

சிந்தூரம்

பசு நெய்

பழங்கள்

அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.

இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

ராமதூதாய தீமஹி

தன்னோ அனுமன் பிரசோதயாத்

 என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

அனுமனை வணங்குவதன் பலன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

 

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

 ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த

வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர்

 வெண்ணெய் சாத்துவது ஏன்: வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

 அனுமன் இன்றி ஸ்ரீ ராமன் இல்லை, ஸ்ரீ ராமன் இன்றி அனுமன் இல்லை.

 



Leave a Comment