எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் ஜெயம் உண்டாக.... இந்த மந்திரத்தை சொல்லுங்க....
தீர்க்க சுமங்கலியாக வாழ....
ஒங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி
வேதாம்பிகே நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ய பிரியவாதினி
அவைதவ்யம் ச ஸௌபாக்யம் தேஹி த்வம் மம ஸூவ்ருதே
புத்ரான் பௌத்ரான் ஸக ஸௌக்யம் ச சௌமாங்கல்யம் ச தேஹிமே
ஓங்காரத்தை முன்னிட்டவளே !வீணை புஸ்தகம் இவைகளை தரித்தவளான வேத மாதாவே ! வைதவ்யம் வராமல் ஸூமங்கலியாக செய் !! கன்யைகளும் ,ஸூமங்கலிகளும் தினசரி மும்மூன்று முறை ஜபித்தால் தீர்க்க ஸூமங்கலிகளாக இருப்பார்கள் !!
ஸ்நாநம் ஆரம்பிக்கும் போது ::
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி
மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்நி போன்றவரும் ஆன பைரவரே உமக்கு நமஸ்காரம். இந்த ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.
கார்ய ஜயம் உண்டாக
ஸ்துதா ஸித்வம் மஹாதேவி விஸூத்தே ந அந்தராத்மனா !
ஜயோ பவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத
ஓ மஹாதேவி ! நீ எல்லோராலும் என்னாலும் சுத்த மனதுடன் துதிக்க பட்டாய்.
உனதருளால் ஸகல காரியத்திலும் ஜயம் உண்டாகட்டும்.!
எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் இதை 10 முறை ஜபித்தால் ஜயம் உண்டாகும் !!





Leave a Comment