நரம்பு கோளாறுகளை நீக்கும் காயத்ரி மந்திரம்.....


பொன் என்பது நம் வாழ்வினில் தேடும் பொருட் செல்வத்தைக் குறிக்கும். புதன் என்பது அறிவுச் செல்வத்தைக் குறிக்கும். ஜோதிடவியலில் புத்திகாரகன் ஆக புதன் கிரகத்தினை குறிப்பிடுவார்கள். வித்யாகாரகன் என்றும் கல்விக்குரிய கோளாகவும் புதனையே குறிப்பிடுவார்கள். 

சாதாரணமான கல்வியறிவு, படிப்பறிவு, ஆகியவற்றை மட்டும் புதன் தருவதில்லை. நுட்பமான அறிவு, சமயோஜித புத்தி, அபாரமான கணித ஞானம் ஆகிய அனைத்தையும் வழங்குவது புதன் மட்டுமே. அதேபோன்று விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கவும் புதனின் அருள் தேவை. 

பொன் எனும் பொருட் செல்வத்தை எவ்வகையிலும் தேடிவிடலாம், ஆனால் புதன் எனும் அறிவுச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்பதையே இந்தப் பழமொழி குறிக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த நாள் புதன் என்பதாலும் எல்லோருக்கும் நன்மையைச் செய்யும் நாள் புதன் என்பதாலும் இந்த நாள் சௌமிய வாரம் என்றழைக்கப்படுகிறது.

புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.

நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.

புதன் காயத்ரி மந்திரம்: 

“ஓம் கஜத்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி 
தந்நோ புத ப்ரசோதயாத்”

 



Leave a Comment