வீட்டிற்கு இறை சக்தியினை கொண்டு வரும் தீபம்.....


இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான்.

குளித்து சுகாதாரமான ஆடை அணிந்து தலையினை பிரித்து விடாமல் பின்னியோ, முடிந்தோ வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

காலையில் 4.30-6 மணிக்கும் மாலையில் 5.30 - 6 மணிக்கும் பொதுவில் விளக்கேற்ற உகந்த நேரங்கள்.

மகா கணபதிக்கு தேங்காய் எண்ணெயும், பெருமாளுக்கு நல்லெண்ணையும், சிவபிரானுக்கு இலுப்ப எண்ணெயும், நெய்யும், முருகனுக்கு நெய்யும், சந்தன எண்ணெய்யும் உகந்தது.

அன்றாடம் பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலம் இட்டு செம்பு தட்டுகளின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் இட்டு விளக்கேற்றி பூ வைத்து வழிபட வேண்டும்.

விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி அன்று சுத்தம் செய்யலாம். செவ்வாய், புதன், வெள்ளி அன்று சுத்தம் செய்யக்கூடாது.

சீயக்காய், வெந்தயம், பயத்தம்பருப்பு, பச்சரிசி, எலுமிச்சை தோல், அரைத்த மாவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறு பூசலாம். தேங்காய் நார் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான ப்ரத்யேக துணி கொண்டு நன்கு துடைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவது. இது விளையாட்டு சமாச்சாரமல்ல. முழு கவனத்தோடு செய்யுங்கள். அக்னிக்கு என்று ஒரு மாபெரும் சக்தி உண்டு. ஒவ்வொரு மனிதனுள்ளும் அக்னி இருக்கின்றது. அந்த உள் ஒளியும், தீப ஒளியும் உங்கள் கவனத்தால் ஒன்று பட வேண்டும்.
 



Leave a Comment