தஞ்சை பெரிய கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்


தஞ்சை பெரிய கோயிலின் வரலாறு    மற்றும் சிறப்புகள்

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் புகழ்பெற்ற முதலாம் ராஜராஜ சோழன் மன்னரை மிகவும் கவர்ந்தது.

இதேபோல் மிகவும் பிரமாண்டமாக ஒரு கோயிலை கட்ட அவர் விரும்பினார். அப்படி கட்டப்பட்ட கோயில்தான் இந்த தஞ்சை பெரிய கோயில் உலகம் வியக்கும் உன்னதமான இந்த கோயில் கி.பி.10 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது. 

இந்த கோயிலை கட்டுவதற்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டது. அதுவும் கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதற்கு 25 ஆண்டுகளும், பின்பு செதுக்கிய கற்களை செட் செய்வதற்கு 9 ஆண்டுகளும் மொத்தம் 34 ஆண்டுகள் ஆனது.

தமிழர்களின் வீரத்துக்கும், கட்டிடக்கலைக்கும் மிகப் பெரிய உதாரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் அமைந்திருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கூறலாம்.
தஞ்சை பெரிய கோயில் கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் காபுரத்தின் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் சிறப்புகள் :-

தஞ்சை  கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்கிறது.

இதற்கு உதாரணமாக தஞ்சை பெரிய  கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி, இதபோன்று தமிழின் உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.  சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. இதேபோல் தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி, இதேபோல் தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, இதபோன்று தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்


தஞ்சை பெரிய கோயிலின்; அமைக்கப்பட்டுள்ள விமானத்தின் உயரம் 216அடி உயரம் கொண்டது. 

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60மீ உயரமான ஒரு கற்கோயிலை மன்னா; முதலாம் ராஜராஜ சோழன் கட்டினாh;.

தஞ்சை பெரிய கோயிலில்  கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23  அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட 1000 ரூபாய்  நோட்டு வெளியிடப்பட்டது.



Leave a Comment