வைகாசி உதயம் சிறப்புகள்....


முருகன் தலங்கள் மட்டுமின்றி பற்பல வைணவ தலங்களிலும்  சிவாலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கருட சேவை, வைகாசி விசாக உதயத்தில் நடைபெறுகிறது.

வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் முக்கியம். அவற்றுள் அதிமுக்கியம் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மேல்கோட்டை (திருநாராயணபுரம்) என்ற நான்கு தலங்கள். அந்த நான்கிலும் மூன்று மிக விசேஷம் என்பார்கள். இதை, ஸ்ரீரங்கம் நடை, திருப்பதி வடை, காஞ்சிபுரம் குடை என்று சொல்வார்கள். அதேகபோல வைகாசி மாதத்தில் தான் மத்வகுல மாமணியான வியாசராஜர் தங்கத்தட்டில் அவதரித்தார்.

உலகுக்கே அகிம்சையை போதித்த அன்பின் வடிவமான புத்தர்பிரான் அவதரித்தது, ஞானம் பெற்றது, நிர்வாணம் (முக்தி) பெற்றது எல்லாமே இந்நாளில்தான். இதைத்தான் புத்த பூர்ணிமா எனக் கொண்டாடுகிறார்கள்.

 காஞ்சி மகா பெரியவா எனப் போற்றப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திரு அவதாரம் ஜய ஆண்டு வைகாசி அனுஷத்தில்தான் நிகழ்ந்தது. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையான ராமலிங்க அடிகள் சத்திய தர்ம சாலையை  ஒரு விசாக நாளில்தான் துவக்கினார். வைகாசி சுக்ல சதுர்த்தசியில் தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்.



Leave a Comment