கோலத்தின் நடுவே பூ வைப்பது ஏன்? 


சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.

வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

 தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

 கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.

இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.

 இடது கையால் கோலம் போடக்கூடாது.

 பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

 கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

 கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.

வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.
 



Leave a Comment