சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட வீடியோ காட்சி....


கடந்த இரண்டாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்தை அடுத்து ஏழு நாட்கள் கழித்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகள் திருவொற்றியூர் எண்ணூர் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்பகுதியில் விநாயகர் சிலைகள்  கரைக்கப்பட்டன. 

7 நாட்கள் வழிபட்ட விநாயகரை மேளதாளங்களுடன் ஆடல் பாடல்களுடன் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக அழைத்துவந்து கடலில் கரைத்தனர் புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை ராயபுரம் புளியந்தோப்பு பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 256 பிள்ளையார் சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராட்சத கிரேன் மூலம் கொண்டு சென்று கரைத்தனர். 

இதேபோன்று மணலி மாதவரம் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணா கடல் பகுதியிலும் திருவற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுகளில் கொண்டுசென்று நடுக்கடலில் கரைத்தனர் கடைசி நாளான இன்று எண்ணூர் திருவொற்றியூர் காசிமேடு மூன்று இடங்களிலும் 356 சிலைகள் கரைக்கப்பட்டன. 
 



Leave a Comment