23 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் கொக்குளம் எருதுகட்டு திருவிழா


23 ஆண்டுகளுக்கு பின் ஆறு கரை மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் கொக்குளம் எருதுகட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

பெக்காமன் கருப்பசாமி, அய்யனார், ஆதிசிவன், முத்தையா சுவாமி, பேச்சியம்மன்,  காமாட்சியம்மன் என்ற ஆறு தெய்வங்களின் எல்லை பகுதிகளை உள்ளடக்கி, இந்த தெய்வங்களில் பேக்காமன் கருப்பசாமி, அய்யனார், ஆதிசிவன், முத்தையா சுவாமிகளுக்கு சிலை வடிவமைக்கப்பட்டு, அந்த அந்த கோவில்களுக்கு கொண்டு சென்று கிடாவெட்டி படையல் செய்து வழிபாடு செய்யும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

முதல்நாள் திருவிழாவாக குதிரை எடுப்பு திருவிழாவில் பாறைப்பட்டி எனும் இடத்திலிருந்து அந்த அந்த கோவில்களுக்கு கொண்டு செல்லப்படும் குதிரைகளை எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது... சுவாமி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்து பூஜைகள் செய்தனர்..

மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடியுள்ள மக்களை பாதுகாக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்...



Leave a Comment