திருநள்ளாறு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது..... 


திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜையும், தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி உள்ளது. 
 
வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது. கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.



Leave a Comment