திருப்பதிக்கு இணையான திருநாறையூர் ஸ்ரீ நிவாசப்பெருமாள்


ஆழ்வார்கள் க்ஷேத்திரங்கள் தோறும் சென்று பக்தியில் ஆழ்ந்து பெருமாளைப் பாடி பரவசம் கொண்டனர். திருமங்கையாழ்வார் திருநாறையூர் ஸ்ரீ நிவாசப்பெருமாளைப் பாடப் பெற்ற சிறப்பு மிக்க திவ்ய தேசஸ்தலம். இது பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 20வது திவ்ய தேசமாகும்.

" செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்" என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 70 சிவாலயங்களைக் கட்டிய அரசன் கோச்செங்கட்சோழன், ஸ்ரீ நிவாசப்பெருமாளின் ஆணைப்படி 71வது கோயிலாகக் கட்டினான் என்பதை உறுதி கூறும்.

பல தீங்குகள் செய்து வந்த சண்டன்,ஹேமனை அழிக்க பெரிய திருவடியாகிய கருடன், இந்திரனின் ஆசி பெற்று மேருமலையின் சிகரத்தில் ஒன்றைப் பிடுங்கி எறிந்து அவர்களை அழித்தார். இத்தலத்தில் விழுந்த சிகரமே"சுகந்த கிரி" எனப்பட்டது.

திருப்பதி பெருமாளைத் தரிசித்த இணையான பலன் இத்தலப் பெருமாளுக்கு உண்டு.மூலவருடன் தாயார் வஞ்சுளவல்லியும் உடனமர்ந்து அருள் பாலிக்கிறார். திரு என்பது இலக்குமி மையும்,பறை என்பது தேனையும் குறிக்கும்.சோலைகளின் வளத்தினால் தேன் பெருக்கெடுத்து ஓடியதால் நறையூர் என்றும் திருவாகிய தேவிக்கு தேனின் இனியதாக இருப்பதின் காரணமாக "திருநறையூர் எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

மணிமுக்தா நதி தீரத்தில் தவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை அவருக்கு மகளாய் பிறந்த வஞ்சுள வல்லியை மானிட உருவில் வந்து திருமணம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

திருப்பதிக்கு இணையான திருத்தலமானதில் திருமங்கையாழ்வாருக்கு ஆசாரியனாகவும், முத்திரை தானம் செய்தவரும் ஆனால் இவரை"பனையூர் நம்பி" எனப் போற்றுகின்றார்.

நறையூர் தம்பிக்கு பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன ஆயினும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் முக்கோடித் தெப்பத்திருவிழா பெரும் சிறப்புடையதாகும். இதன் ஒர் அங்கமாக"கல் கருட சேவை"புறப்பாடு மிகச் சிறப்பாக நடைபெறும்.

திருநாறையூர் கும்பகோணத்தில் இருந்து 10கி‌மீ தொலைவில் அமைந்துள்ளது ‌ சாளக்கிராமத் திருமேனியராய் மூலஸ்தானத்திற்க்கு கீழே தெற்கு நோக்கி அருளும் கல் கருடன் வேறெங்கும் இல்லாத சிறப்பையும் ,"கல் கருடன் புறப்பாடும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு இருமுறை இக் கல் கருட சேவை நடைபெறும். முதலில் 4 பேர் சுமந்து வரபின்8 பேர் எனப் படிப்படியாக 16பேர், 32பேர், 64பேர், 128 பேர் என சுமப்பவர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

இறுதியில் வீதியுலா சப்பாத்தின் மூலம் நடக்கும். முதலில் நால்வராகவும் பின்னர் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து சுமக்கும் வலிமையான வராகிறார் கருட பகவான்.மாலை 6மணியளவில் கிளம்பும் கருட பகவான் திருக்கோயிலை அடைய விடியற்காலை ஆகி விடும்.பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் பக்தி பரவசமாக இக்காட்சியை காண கூடுகின்றனர்.



Leave a Comment