நின்ற கோலத்தில் காட்சி தரும் செண்பக வல்லி அம்மன்


தென் மாவட்டத்தில் குறிப்பாக கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி பகுதியில் செண்பகவல்லி எனும் பெயருடைய பெண்கள் ஏராளமாக இருப்பர். செண்பக வல்லி அம்மன் கோவில்பட்டியின் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறாள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்று இக்கோயிலில் செண்பக வல்லியை முதலில் வணங்கிவிட்டுத்தான் சுவாமியைத் தரிசனம் செய்வது வழக்கம்.

கருவறையில் அருள் தரும் அன்னை செண்பகவல்லி அம்மன் ஏழடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

செண்பக வல்லியை மனமுருகி வழிபட்டால் செல்வமும், நலமும் மனம் போல் மணவாழ்வும் மக்கட் பேறும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

இங்குள்ள அன்னைக்கு ஆடி மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த அன்னையை வழிபட்டு வந்தால் எண்ணியது ஈடேறும்.



Leave a Comment