இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


நெல்லையில் உள்ள இஸ்கான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் சார்பில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன்படி நெல்லையில் இந்த ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நெல்லையில் ஞாயிற்றுக்கிழமையும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.


தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும். கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள், மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன் மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.



Leave a Comment