கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம்


ஸ்ரீநல்லாண்டவர், மக்கள் கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சமாக இருக்கிறார். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது நல்லாண்டவர் கோயில்.

மூலவர் பெயர் மானம்பூண்டி நல்லாண்டவர். சுதை சிற்பம். வண்ணப்பூச்சு. ஒருகாலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டும் ஞானநிலையில் அருள்பாலிக்கிறார். அருகே இரு காவல் தெய்வங்கள். 1000

வருடங்கள் பழைமையானது இக்கோயில். தினமும் 4 கால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தின் நல்லாண்டவரை அனைத்து இனத்தவரும் குல தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். மதுரை வீரன், ஏழு கருப்பு, பாரிகாரர் பேச்சியம்மன், முத்துக்கருப்பன், சப்த கன்னியர்கள் சந்நிதிகளும் உள்ளன. பிரமிக்க வைக்கும் யானை, குதிரை, ஆஞ்சநேயர் சுதை சிற்பங்களும் உண்டு.

இவ்வாலயத்தில் ஆடி மாதம் பெருந்திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், வீதியுலாவும் நடக்கும்.
அமைவிடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை நகரம், செக்போஸ்டில் இக்கோயில் அமைந்துள்ளது.



Leave a Comment