ஆடி வெள்ளியில்...அம்மனை வணங்கும் முறை!


ஆடி வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில்  அம்மனை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது நம்பிக்கை.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். 

மேலும் ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபட்டு. பின்பு அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். தொடர்ந்து அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்லி பூஜிப்பது மேலும் வாழ்வில் ஏற்றத்தை அளிக்கும்.



Leave a Comment