ஆடி அமாவாசையொட்டி பக்தர்களுக்கு அருள் பாலித்த மணக்குள விநாயகர்...


ஆடி அமாவாசையொட்டி அருள்மிகு மணக்குள விநாயகர்,  வரதராஜ பெருமாள், சுப்பிரமணியசாமி ஆகியோர்  ஆகியோர் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை புதுச்சேரி கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சுவாமிகளுக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

புதுச்சேரியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரி கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் காந்தி சிலை அருகே கடலில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு அரிசி பூ பழம் காய்கறிகள் என தர்ப்பணம் கொடுத்தனர்.

தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறியும், வழிபாடு நடத்தியும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி,  ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து தர்ப்பணம் கொடுக்கப்பட்ட பிண்டங்களை கடலில் கரைத்து நீராடி முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினார்கள்.

தொடர்ந்து கடற்கரைக்கு வருகை புரிந்த வரதராஜ பெருமாள், மணக்குள விநாயகர், சாரம் சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு நந்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு தீபங்களை ஏற்றி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தவர்கள் வழிபட்டு சென்றனர்.

புதுச்சேரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு தர்ப்பணங்களை கொடுத்து வழிபாடு நடத்தினார்கள்.



Leave a Comment