பிரதோஷ வழிபாட்டின் மூலம் அடையும் பலன்கள்


சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் என்ற இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன்அஸ்தமனத்துக்கு முன்னதாக ஓன்னரை மணி நேரம். அஸ்தமனத்துக்கு பின்னதாக ஓன்னரை மணி நேரமுமே. பிரதோஷம் எனப்படும்.

மாலை 4-30 மணி முதல் 7-30 மணி வரையில் நட்சத்திரங்கள் உதயமாகும் காலம் வரை சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடனம் ஆடுகிறார். இந்த நேரத்தில் சுவாமியைத் தரிசனம் செய்து, பிரதட்சணம் செய்தால், ஒரு சுற்றுக்கு ஒரு கோடி சுற்றிய பலன் கிடைக்கும். திங்கட்கிழமை, சனிக்கிழமை வரும் பிரதோஷங்களில் சிவனை வழிபடுவது அதிகமான பலனைத் தரும். நந்தியின் பின்னால் நின்று, அதன் கொம்புகளுக்கிடையில் சிவலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். ஒருவர் தன் வாழ்நாளில் 120 பிரதோஷங்கள் சிவனை வழிபட்டால், அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. பிரதோஷம் அன்று சிவன் கோயிலுக்குச் செல்வதால் தீமைகள் விலகி வாழ்வில் வளம் பெற்று, நன்மைகள் பெறலாம்.Leave a Comment