தீபங்களில் ஏற்றும் எண்ணெய்யின் பலன்கள்


பசுவின் நெய் :- செல்வம் பெருகும், அஷ்டலெட்சுமிக்கு உரிய எண்ணெய் என்பதால் வளம் கொழிக்கும்.

நீரடிமுத்து எண்ணெய்:- பிரச்சனைகளை நீக்கும். கேதுவிற்கு உரிய என்பதால் கேது தோஷங்கள் தீரும்.

வேம்பு எண்ணெய்:- மகிஷாசுரமர்த்தினிக்கு உரியது. பிறரின் துர்பார்வை நீக்கும், எதிரிகளின் தொல்லை போக்கும்.

இலுப்பை எண்ணெய்:- புவனேஸ்வரி அன்னைக்கு உரியது. தன தானியங்கள் பெருகும்.

புங்கை எண்ணெய்:- திருமணத் தடைகளை நிவர்த்தி செய்யும், சர்ப்ப தோஷம் விலகும். நாகதேவதைக்கு உரியது.

சந்தனாதி எண்ணெய்:- குபேர செல்வங்களையும், சகல சம்பத்துக்களையும் தரும்.


ஆமணக்கு எண்ணெய்:- தட்சணாமூர்த்திக்கு உரியது. இல்லத்தில் அமைதியும் இறைவனின் அருளும் கிடைக்கும்.

குறிப்பு:-வீட்டில் விளக்கேற்றி இறைவனை வணங்கும்போது குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி வணங்கினால் இறைவனின் பூரண ஆசி கிடைக்கும்.Leave a Comment