ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான நேற்று கருட மண்டபதிலிருந்து தங்கக்குடம் எடுத்துச் செல்லப்பட்டு, காவிரியிலிருந்து திருமஞ்சனம் எடுத்து, யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாகத் தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.  பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் நேற்று முழுவதும் மூலவர் சேவை நடைபெறவில்லை.இன்று தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஆரத்தியும், மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவையும் நடைபெறவுள்ளது.Leave a Comment