அன்னம் அருளும் அன்னப்பூரணி அம்மன்


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில், இக்கோவிலின் சிறப்பு அம்சமாக அன்னப்பூரணி அம்மன் சன்னதியுள்ளது. சிவனுக்கே அன்னத்தை வழங்கிய இந்த அம்மன் தெற்கு பக்கம் பார்த்தவாறு காட்சியளிக்கிறார். இத்தகைய சிறப்பம்சம்முள்ள காட்சியை காசியில் மட்டுமே காண முடியும். தமிழகத்தில் இப்படியொரு சன்னதி அமைப்பு வேறெந்த திருத்தலத்திற்கும் இல்லை என்று இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் காசி விஸ்வநாதர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலையானது, அன்னப்பூரணி அம்மனை பார்த்தவாறு அமையப்பட்டிருக்கும். அதே போன்ற அமைப்பு இத்திருத்தலத்திலும் காணப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு வந்த அன்னபூரணியை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உணவு பிரச்சனை வராது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.Leave a Comment