திருச்சானூரில் தெப்போற்சவ விழா பணிகள் தீவிரம்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஜூன் 23-ஆம் தேதி முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்க உள்ளது. அதற்கான சுவரொட்டியை தேவஸ்தானம் புதன்கிழமை வெளியிட்டது.


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜூன் 23 முதல் 27-ஆம் தேதி வரை திருச்சானூரில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி தொடர்ந்து 5 நாள்கள் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டி மற்றும் கையடக்கப் பிரதிகளை தேவஸ்தான அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்டனர்.


தெப்போற்சவ நாள்களில் தினந்தோறும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை திருச்சானூரில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்படும் தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் வலம் வர உள்ளனர். மேலும் ஜூன் 26-ஆம் தேதி பத்மாவதி தாயார் யானை வாகனத்திலும், 27-ஆம் தேதி கருட வாகனத்திலும் மாடவீதியில் வலம் வர உள்ளனர். அதற்காக திருச்சானூரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளத்தில் உள்ள பழைய நீர் அகற்றப்பட்டு, திருக்குளத்தை சுத்தம் செய்து, புதிய நீர் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment