திருச்செந்தூர் முருகன் ஜூன் 23-இல் ஆனி வருஷாபிஷேகம்


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை 8.30 - 9 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.Leave a Comment