குமரி திருப்பதி கோயிலுக்கு விரைவில் மகா கும்பாபிஷேகம்


கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருமலை திருப்பதி கோயில் மகா கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் திருமலை திருப்பதி கோயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை சென்னை ஆலோசனை மையக்குழுவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை நடந்துள்ள கட்டுமானப் பணியின் நிலவரம், தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் போன்ற முழுவிவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.


மேலும், தற்போது நடந்துள்ள பணிகள் தவிர சேர்க்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் சுபமுகூர்த்த தினம் பார்க்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.


அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மகாகும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வர், தமிழக ஆளுனர், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திருப்பதி கோயில் மீது பற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



Leave a Comment