குறிச்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேகம்


குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

குறிச்சியில் பழமை வாய்ந்த சொக்கநாதர் சுவாமி, மீனாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு ஹோமம் முதலான பல்வேறு பூஜைகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவர் விமானம், அம்பாள் விமானம், பரிவார மூர்த்தி விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பஞ்ச மூர்த்திகளுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.Leave a Comment