ஜூன் 27 நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம்....


நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தேரோட்டத்தைக் கண்டு மகிழ்வர்.

இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா ஜூன் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

நெல்லையப்பர் கோயிலில் உள்ள 5 தேர்களும் சுத்தம் செய்யும் பணி முதற்கட்டமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.Leave a Comment