ராமநாதசுவாமி கோயிலில் அணையா விளக்கு !


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 1400 கிலோ எடை கொண்ட அணையா விளக்கு ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. சன்னிதி முன்பு நந்தி மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.

பக்தர்கள் கொண்டு வரும் எண்ணையை இதில் ஊற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 1400 கிலோ எடையும் 4 அடி உயரமும் கொண்ட அணையா விளக்கில் பக்தர்கள் நெய் மற்றும் எண்ணையை ஊற்றி வழிபடுகின்றனர்.

முதல் கட்டமாக நந்தி மண்டபத்தில் இந்த அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்மன் சன்னிதி கொடி மரம் அமைந்துள்ள பகுதியிலும், நவக்கிரக மண்டபத்திலும் இதேபோன்ற விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 4 புறமும் கண்ணாடி பொறுத்தப்பட்டு இரும்பு விளக்கில் திரியிட்டு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.Leave a Comment