திருப்பதி கோயில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.3.25 கோடி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 341 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3.25 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.Leave a Comment