திருப்பதியில் விரைவில் தரிசனம்.... நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் திட்டம் மே முதல் வாரத்தில் அமல்
புதிய அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு பரிசீலனைக்கு வைக்கப்பட்டு நடைமுறையில் கொண்டு வரப்படும் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டம் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
திருமலையில் இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜூ தேவஸ்தான பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் வழங்கப்பட்டது.
தற்போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய அறங்காவலர் குழு இந்த மாத இறுதியில் பதவியேற்கவுள்ளதால் அவர்கள் முன்பு இத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு பின்னர் மே மாதம் முதல் வாரத்தில் பக்தர்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
திட்டத்திற்காக திருப்பதியிலும் திருமலையிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு, 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று தேவஸ்தான பணியாளர்கள் இந்த திட்டத்திற்காக மென்பொருள் தயார் செய்தி டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் சோதனை முறையில் டிக்கெட் பெற்று லட்டு டோக்கன் பெறுவது உள்ளிட்ட வேறு ஏதாவது சிரமங்கள் ஏற்படுகிறதா என சோதனை இன்று நாள் நன்றாக உள்ளதால் நடத்தி வருவதாகவும் தினந்தோறும் திருமலையில் உள்ள பஸ் ஸ்டாண்டில் அதிகாலை 500 டிக்கெட் வரை சோதனை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



Leave a Comment